• vilasalnews@gmail.com

யார் இந்த மெடிக்கல் விஜயகுமார்?இவரை கொண்டாடி தீர்க்க இப்படியொரு கூட்டம் தமிழகத்தில் இருக்கிறதா?

  • Share on

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் ஒன்றுதான் ரேக்ளா ரேஸ் என்று சொல்லக்கூடிய மாட்டு வண்டி எல்கை பந்தயம். இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் சென்ற இடமெல்லாம் வெற்றி கொடி நாட்டி திரும்பி வரும் காளைகள் என்றால் அது தூத்துக்குடி கே.சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமாரின் காளைகள் தான் என்று சொல்லும் அளவிற்கு, ரேக்ளா ரேஸ் போட்டி வரலாற்றில் ஒரு தனித்த அடையாளத்தோடு திகழும், மெடிக்கல் விஜயகுமாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ரசிகர் பாட்டாளங்கள் ஆரவாரத்தோடு ஆங்காங்கே கொண்டாடி வருகின்றனர்.


யார் இந்த மெடிக்கல் விஜயகுமார்?இவரை கொண்டாடி தீர்க்க இப்படியொரு கூட்டம் தென் மாவட்டங்களில் இருக்கிறதா? பந்தய மாடு வளர்ப்பவருக்கு பின்னாலும் இப்படியொரு கூட்டம் இருக்குமா? இவ்வாறு பல்வேறு கேள்விகள் அவரது ரசிகர்கள் பட்டாளத்தை காணும் பலருக்கும் எழுகிறது.


இந்த மெடிக்கல் விஜயகுமாரை தெரிந்து கொள்ளும் முன்பு, ரேக்ளா ரேஸ் என்று சொல்லக்கூடிய மாட்டு வண்டி எல்கை பந்தயத்தின் வரலாறையும் சற்று திரும்பி பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் மெடிக்கல் விஜயகுமார் பின்னால் செல்லும் ரசிகர்களின் கூட்டத்திற்கான காரணத்தையும் புரிந்து கொள்ள முடியும்.


ஆண்டில் ஆறுமாத சீசனில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்றால் சீசனே இல்லாத பந்தய விளையாட்டு ரேக்ளா ரேஸ்கள் தான். ஜோடி நாட்டுமாடுகளை வண்டியில் பூட்டி சாரதி, துணை சாரதியுடன் தார்ச் சாலைகளில் சீறிப்பாயும் மாடுகளை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.


வயலில் மண்ணை உழவோட்டச் செய்வது, நீச்சல் பயிற்சி தருவதுடன், பால், முட்டை, கானப்பயறு, சுண்டல், கோதுமை, கேழ்வரகு, பேரீச்சை, பருத்தி உள்ளிட்ட சத்தான உணவுகளையே பந்தய மாடுகளுக்கு கொடுக்கின்றனர். பந்தயத்தில் ஜெயித்தால் கிடைக்கும் பரிசுதொகை லாபத்தை விட, பெயரும் பெருமையும் தான் ஒவ்வொரு மாட்டின் உரிமையாளரும், சாரதி, பின்சாரதி, ரசிகர்கள் விரும்புவார்கள். அதற்காக தான் மாடுகளை வளர்க்கப்படுகிறது.


ஜல்லிக்கட்டில் மாடுகளை வாடியில் அவிழ்த்து விடும் போது ஒருமுறை தான் உரிமையாளரின் பெயரை சொல்வார்கள். இங்கே மாடுகள் ஓடும் போது குறிப்பாக முதல் மூன்று இடங்களில் செல்லும் போது தொடர்ந்து உரிமையாளரின் பெயரை உச்சரிக்கப்படும் போது, களத்தில் ரசிகர்களின் ஆரவார சத்தம் விண்ணை பிளக்கும். வெற்றிக் கோட்டை தொடும் போது மாடுகளின் இதயமும், ஒவ்வொரு மாட்டின் உரிமையாளர், சாரதி, பின்சாரதி, ரசிகர்கள் என எல்லோருடைய இதயமும் ஒன்றாக துடிக்கும். களத்தில் வெற்றி தோல்வி சகஜம். ஆகவே, ஜெயிக்காவிட்டாலும் காளைகள் காளை வளர்ப்போருக்கு செல்லப் பிள்ளைகள் தான்.


இத்தகைய உருசுக்கு சமமான மாட்டுவண்டி எல்கை பந்தயத்திற்கு என்றே தமிழகத்தில் லட்சகணக்கான ரசிகர்கள் கூட்டம் உண்டு. இந்த கூட்டங்கள் ஏதோ போட்டியை பார்த்தோம் சென்றோம் என்று திரும்பும் கூட்டம் கிடையாது. ஒவ்வொரு நொடியும் அவர்கள் நாடி, நரம்பு, சதை, இரத்தம் எல்லாவற்றிலும் மாட்டுவண்டி எல்கை பந்தயத்தின் மீதும், காளைகள் மீதும் தீராத காதல் வெறிக்கொண்டு திரியும் வெறித்தனமான ரசிகர்கள் கூட்டமாகும். இது போன்ற ரசிகர்கள் கூட்டம் எந்தவொரு போட்டிக்கும் இருக்க முடியாது என்றே சொல்லலாம்.


இந்த ரசிகர்கள் கூட்டத்தின் ஒவ்வொருவரின் மனதில், போட்டியில் பங்கேற்கும் காளைகளும், அந்த காளைகளை களத்திலே ஓட்டும் சாரதிகளும், பின்சாரதிகளும், அந்த காளைகளின் உரிமையாளர்களும் ஹீரோவாக குடிஅமர்கின்றனர். அப்படி பெருவாரியான ரேக்ளா ரசிகர்கள் கூட்டத்தின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருப்பவர் தான் தூத்துக்குடி கே.சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார். 


தனது காளைகள் களத்தில் வெற்றி வாகை சூட தயார்படுத்துவதிலும், காளைகளை ஓட்ட சாரதி, பின்சாரதி யார் என்பதை தேர்வு செய்வதிலும், எந்த களத்தில் எந்த ஜோடி காளைகளை களம் இறக்க வேண்டும் என மிக நேர்த்தியாக திட்டமிடுவதில் மிகவும் கெட்டிக்காரராக திகழ்பவர் மெடிக்கல் விஜயகுமார். அதனாலே கண்ட பல களங்களில் அனைத்திலும் வெற்றி காண்பவராக மெடிக்கல் விஜயகுமார் திகழ்கிறார். 


மேலும், தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை, நாட்டு மாடு இனத்தை காப்பதற்காக பந்தய காளைகள் வளர்பிற்காக செலவு செய்கிறார். அதுமட்டுமில்லை ஏழை, எளிய மக்களுக்கு சத்தமில்லாமல் உதவி செய்து வரும் நவீன கர்ணன் ஆவர். இதனாலே இவருக்கு பின்னால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

  • Share on

தெய்வசெயல்புரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - சண்முகையா எம்எல்ஏ பங்கேற்பு!

சாத்தான்குளம் அருகே பச்சிளம் குழந்தை திடீர் உயிர் இழப்பு : போலீசார் விசாரணை!

  • Share on