ஓட்டப்பிடாரம் அருகே தெய்வசெயல்புரம் கிராமத்தில் இன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு 15 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சிவகுமார், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் லிங்கராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன், கருங்குளம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சுரேஷ் காந்தி, கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, ஒன்றிய கவுன்சிலர் ராதா மாரியப்பன், தகவல் தொழில்நுட்ப அணி சஞ்சய், கிளை செயலாளர் முருகன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.