• vilasalnews@gmail.com

சாத்தான்குளம் அருகே டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

  • Share on

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் ஒவ்வொரு ஜூலை மாதமும் டெங்கு எதிர்ப்பு மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனையொட்டி, தூத்துக்குடி மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர்.பொற்செல்வன் உத்தரவின் படி சாத்தான்குளம் வட்டாரத்தில் கொசுப்புழு ஒழிப்பு பணி தீவிரப் படுத்துதல், பள்ளி கல்லூரி மற்றும் விடுதிகளில் ஆய்வு செய்தல், காய்ச்சல் கண்காணிப்பு பணி,  பொது சுகாதார சட்ட விதிகளை மீறுவோருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்குதல் போன்ற பல நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக முதலூர் செவன்த்டே அட்வென்டிஸ்ட் நர்சரி பள்ளி மற்றும் தட்டார்மடம் புனித அன்னாள் ஆர்.சி துவக்கப் பள்ளிகளில் டெங்கு எதிர்ப்பு மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ரமேஷ் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் ஜான்சன் ஆகியோர் தலைமை வகித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால் ஆபிரகாம் கொசுப்புழு உற்பத்தியாகும் விதம், அதனை அழிக்கும் முறைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மாணவ மாணவியர் ஒத்துழைப்பு தருவதன் அவசியம் குறித்து விரிவாக பேசினார்.

இதில் சுகாதார ஆய்வாளர்கள் கிறிஸ்டோபர் செல்வதாஸ், மந்திரராஜன், ஜெயபால் மற்றும் ராமசுதன் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  இறுதியில் அருண் உறுதிமொழி வாசிக்க அனைவரும் டெங்கு உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர்  செல்வதாஸ் மற்றும் மந்திர ராஜன் செய்திருந்தனர்.

  • Share on

செக்காரக்குடி அரசு பள்ளியில் டெலஸ்கோப்பில் நிலவை காண்பது குறித்த பயிற்சி!

தெய்வசெயல்புரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - சண்முகையா எம்எல்ஏ பங்கேற்பு!

  • Share on