செக்காரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு டெலஸ்கோப்பில் நிலவை காண்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு டெலஸ்கோப்பில் நிலவை காண்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தலைமைஆசிரியர் முத்துகுமார் தலைமை வகித்தார். தூத்துக்குடி அஸ்டரோ கிளப் கருத்தாளர் முருகப்பெருமான் முன்னிலை வகித்தார் உதவி தலைமை ஆசிரியர் நம்பிராஜன் வரவேற்றார்
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி வன்னியப்பன் மாணவர்களுக்கு நீல் ஆம்ஸ்ட்ராங் 1969 ஜூலை 21ல் நிலவில் முதலில் கால் பதித்த தினம் குறித்தும் விண்வெளி அறிவியல் முன்னேற்றங்கள், 2024 ஆம் ஆண்டின் சர்வதேச நிலவு தினத்தின் கருப்பொருள் "நிழல்களை ஒளிரச் செய்தல்" குறித்து பேசினார்.
மாணவர்களும் ஆசிரியர்களும் டெலஸ்கோப் மூலம் தொலைவில் உயரத்தில் உள்ள காற்றாடியில் எழுத்துக்களையும் காட்சிகளையும் கண்டு மகிழ்ந்தனார் . ஆசிரியை அருள்செல்வி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். அறிவியல்ஆசிரியர் இராமசாமி நன்றி கூறினார்.