கோவில்பட்டி இரயில் நிலையம், எட்டயபுரம் சாலை, வேலாயுதபுரம் பகுதிகளில் கட்டப்பட்ட புதிய பயணிகள் நிழற்குடையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ரயில் நிலையம், வேலாயுதபுரம், எட்டயபுரம் சாலை பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் தலா ரூ.9லட்சம் வீதம் 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 3 பயணிகள் நிழற்குடைகளை முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.