• vilasalnews@gmail.com

திருச்செந்தூர் முருகனை காண படையெடுக்கும் திரைப்பிரபலங்கள்! என்ன காரணம் தெரியுமா?

  • Share on

திருச்செந்தூர் முருகனை சரணடைந்தால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில், செந்தூரை நாடி வருகின்றனர் திரைப்பிரபலங்கள்.


புனித கடலில் நீராடி விட்டு, கடற்கரை மணலில் ஈரக்காலைப் பதித்தபடி, கோயிலின் கோபுரத்தை பார்த்தாலே பரவசமாகி விடுவார்கள் திருச்செந்தூர் முருகனின் அடியார்கள். கோயிலுக்கு உள்ளே சென்று, அழகிற்கான பொருளை அதிகாரத்தில் தேடினால் முருகனின் முகத்தை தவிர வேறு எதையும் காண முடியாத அளவிற்கு, அழகை முழுமையாய் நிறைத்து கொண்டு காட்சியளிக்கும் முருகனை கண்டதும், தன்னிலை மறந்து நம் கரம் தானகவே குவித்து முருகா என்ற கோஷம் நம்உள்ளத்திலே, நம்மையே அறியாத வகையில் எழும்பச் செய்வதுதான் செந்தூர் முருகனின் தெய்வீக அருள். 


பழமையும் புகழும் மிக்க முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூருக்கு நாளுக்கு நாள் மலை ஏற்றம் போல, பக்தர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே தான் வருகிறது. கோவிலில் கூடும் கூட்டம் தலையா கடல் அலையா என்று வியக்கும் வண்ணமே நித்தமும் சத்தமில்லாமல் பக்தர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.


முருகனின் அருளை வேண்டி திருச்செந்தூருக்கு ஓடோடி வருபவர்கள், முருகனை காணும் ஆர்வமிகுதியால் அவரை காண வழி தேடும் பக்தர்கள், கோவிலில் நூறு ரூபாய் கட்டண தரிசனம், முதியோர்களுக்கான தனி வழி தரிசனம், பொது தரிசனம் என மூன்று வழிகள் இருப்பினும், முருகனிடம் நேரடியாக அழைத்து செல்ல, திருச்செந்தூர் முருகன் உட்பட்ட யாரும் பரிந்துரை செய்யாத சில பிரதிநிகள் சண்முக விலாஸ் மண்டபம் வழியாக பல ஆயிர கணக்கான பணத்தினை பெற்றுக்கொண்டு அழைத்துச்செல்வதும், வழிவிடுவதுமான அநியாங்களும் அரங்கேறுவது உண்டு. இதனை புன்முருவலோடு உள்ளே இருந்து முருகனும் காண்பது உண்டு.


முதியோருக்கான வழியை ஏற்படுத்திவிட்டு, முதியோருக்கான வயதை குறிப்பிடாமல் விட்டுவிட்டார்கள் போல, அதனால் தான் முதியோர்களுக்கான தனி வழி தரிசன பாதையில் காவல் பணியில் உள்ள தனியார் காவலரிடம் வெட்டுவை வெட்டி விட்டால், அவர் அவ்வழியாக யாரையும் விட்டு விடுவார் வயது தெரியாத பல 60 வயதுக்கு உட்பட்ட பல முதியோர்களை.  


இப்படியோக எதிர்வழியிலும், 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பொது வழி எனும் நேர்வழியிலும் முருகனை காணத்துடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.


அந்த வகையில், நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் ஜோடி, பிரபல நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன், நகைச்சுவை நடிகர் செந்தில், ரமணா, கஜினி போன்ற வெற்றி படங்களின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் நடிகர் ரக்க்ஷன், இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, அவரது மனைவி நடிகை ரோஜா என முருகனின் திருவடி தேடி சமீபத்தில் அடுத்தடுத்து திருச்செந்தூரில் சரணடைந்த பிரபலங்கள் ஏராளம்.


இவர்களன்றி சமீபத்தில் ஜப்பானியர்கள் சிலர்கூட திருச்செந்தூர் வந்து முருகனை தரிசித்து சென்றனர். சூரனை வீழ்த்தி ஜெயந்திநாதராக வீற்றிருக்கும் திருச்செந்தூர் முருகனை தரிசித்தால், ஜெயம் நிச்சயம் என நம்புகின்றனர் திரையுலகினர். இதற்காகவே, தங்களது அடுத்தடுத்த படைப்புகளின் வெற்றிக்காக, திருமுருகனின் திருவடியில் தஞ்சமடைந்து வருகின்றனர்.


மொத்தத்தில் செந்தூர் வந்து செல்பவர்கள் தாங்கள் எண்ணியதை வெல்வார்கள் என்று நம்புகின்றனர். அதுவே நடக்கிறது!

  • Share on

இளவேலங்கால் கிராமத்தில் குடிநீர் இணைப்பு திட்ட பணிகள் - சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

குளத்தூரில் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

  • Share on