ஓட்டப்பிடாரம் அருகே இளவேலங்கால் கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூபாய் 41 லட்சம் மதிப்பீட்டில் 431 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்ட பணிகளை இன்று ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஒன்றிய பொறியாளர் பாலநமச்சிவாயம், கிளைச் செயலாளர் ரமேஷ், இளைஞரணி செல்வராஜ் ஒப்பந்தகாரர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.