• vilasalnews@gmail.com

மழை வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி : ஆட்சியரிடம் மதிமுக கோரிக்கை!

  • Share on

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மழை வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக மதிமுக தூத்துக்குடி மாநகர செயலாளர் முருகபூபதி, மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ், தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணப்பெருமாள் ஆகியோர்  ஆட்சியரிம் அளித்துள்ள மனுவில்,

 "ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதியில் வௌ்ளத்தால் மணல் வயல் பகுதியில் அதிகமாக வந்துள்ளதால் விவசாயிகள் தண்ணீர் இருந்தும் விவசாயம் செய்ய முடியாமல் உள்ளனர். ஆகவே விவசாயிகள் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் வாங்கிய விவசாய கடன்களை விவசாயிகளின் நலன் கருதி தள்ளுபடி செய்ய வேண்டும். 

ஸ்ரீமுலக்கரை முதல் ஸ்ரீவைகுண்டம் செல்லும் கரை ரோட்டில் விவசாயிகள் பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். அந்த கரை ரோட்டில் இரவு நேரங்களில் செல்வதற்கு மின்விளக்கு வசதி இல்லாமல் உள்ளது. ஆகவே பொதுமக்களின் நலன் கருதி கரை ரோட்டில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என விவசாயிகள் சாா்பாக மாவட்ட கலெக்டா் லட்சுமிபதியிடம் அளித்துள்ள கோாிக்கை மனுவில் தொிவித்துள்ளனர்.

  • Share on

வேன் உரிமையாளர் கொலையில் சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது : நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!

இளவேலங்கால் கிராமத்தில் குடிநீர் இணைப்பு திட்ட பணிகள் - சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

  • Share on