ஆலந்தலையில் ரூ.52 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டியதற்கு உறுதுணையாக இருந்த எம்எல்ஏ சண்முகநாதனுக்கு மீனவ மக்கள் நன்றி தெரிவித்தனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையில் கடல் அரிப்பைத் தடுக்கும் பொருட்டு ரூ.52 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.
அதனையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்வர் அதற்கான பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த ஆலந்தலை மீனவ கிராம மக்கள் முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிலையில், நேற்று இந்த திட்டத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்எல்ஏவை, சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் ஊர் நல கமிட்டி தலைவர் மகிபன் தலைமையில், செயலாளர் ரமேஷ், பொருளாளர் ரொமில், ஆலோசகர் ஜான்சன் உறுப்பினர்கள் ஜெயிட்டன், வென்சஸ் லாஸ், பேபி ராஜ், பிரியமன், இன்னோ சென்ட், இருதயராஜ், பெர்டின் ஆகியோருடன் சென்று நன்றி தெரிவித்தனர்.
அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத் தலைவரும் வேளாண் விற்பனை குழு உறுப்பினருமான வழக்கறிஞர் திருப்பாற்கடல், தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, கருங்குளம் ஒன்றிய செயலாளர், ஒன்றிய துணைச் சேர்மன் செக்காரக்குடி இலட்சுமண பெருமாள், தெற்கு மாவட்ட மீனவர் அணி தலைவர் ஜெபமாலை, சாம்ராஜ் உள்பட பலரும் இருந்தனர்.