• vilasalnews@gmail.com

சாத்தான்குளத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா : போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு!

  • Share on

சாத்தான்குளம் பெருந்தலைவர்காமராஜர் இயக்கம் சார்பில் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு சாத்தான்குளம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, ஓவியம், கட்டுரை, பாட்டு உள்ளிட்டப ல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்நிலையில், சாத்தான்குளம் சன்னதி தெருவில் வைத்து பெருந்தலைவர் காமராஜர் இயக்கம் சார்பில் காமராஜர் பிறந்த தினம் மற்றும்  போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு  விழா நடைபெற்றது. விழாவுக்கு இயக்கத் தலைவர்  ஜான்ராஜா தலைமை வகித்தார். செயலர் ஜெயராஜேஷ்குமார் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ராஜம் ராஜ்குமார் வரவேற்றார். சட்ட ஆலோசகர் வேணுகோபால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதில் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் கலந்து கொண்டு, போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளை பாராட்டிபரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

இதில் தூத்துக்குடி தொழிலதிபர்கள் தர்மராஜ், ஜெயகோபால், நாசரேத் ராஜா, நாசரேத் வியாபாரிகள் சங்க தலைவர் செல்வன், திரைபட தயாரிப்பாளர் சரவணன், படுக்கப்பத்து சரவணன், உள்ளிட்ட இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுடலைமணி நன்றி கூறினார்.

  • Share on

அரசு மகளிர் பள்ளியில் தமிழ்நாடு தின விழா : மாணவிகள் அசத்தல்!

விளாத்திகுளம் அருகே தந்தையின் இறப்புக்கு காரணமான மகனுக்கு 10 ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

  • Share on