விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், புதிய பாலம், ரேஷன் கடை, வகுப்பறை கட்டிடம், அங்கன்வாடி மையக் கட்டிடம் உள்ளிட்டவற்றை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
புதிய பாலம் திறப்பு
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு மாநில நிதிக்குழு மானியம் (மாவட்ட ஊராட்சி) 23-24 திட்டத்தின் கீழ் ரூ.18-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய பாலத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம் கல்லூரி முதல்வர் கிரேசர் ஜேக்கப், புதூர் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் பேரூர் செயலாளர் மருதபாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரக்கனி, மாவட்ட பிரதிநிதி வி.சி காளிமுத்து, புதூர் கிழக்கு ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் சூர்யா, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய ரேஷன் கடையை திறப்பு
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.13.16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக் கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் பேரூர் செயலாளர் மருதபாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஊராட்சி மன்ற தலைவர் உலகம்மாள் முனியசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய வகுப்பறைகளை கட்டிடம்திறப்பு
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர்- அழகாபுரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.32.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் பேரூர் செயலாளர் மருதபாண்டியன், பள்ளி தலைமை ஆசிரியை கங்கேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி பரமசிவம், ஒப்பந்ததாரர் சீனி (எ) ராஜகோபால் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அங்கன்வாடி மையக் கட்டிடம் திறப்பு
தூத்துக்குடி மாவட்டம்,விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டன்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14.31-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம் புதூர் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் பேரூர் செயலாளர் மருதபாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரக்கனி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.