உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் பிரசன்னா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வட்டார சுகாதார புள்ளியலாளர் சகாய பெர்லின் கலந்து கொண்டு மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது குறித்து மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. தொடர்ந்து மக்கள் தொகை கட்டுப்படுத்துவது குறித்து உறுதி மொழியும் ஏற்கப்பட்டது.
இதில் பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி, சுகாதார ஆய்வாளர்கள் தேவசுந்தரம், ஞானசேகர், சுர்ஜின் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.