• vilasalnews@gmail.com

பொத்தகாலன்விளை அங்கன்வாடிமைய குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள்!

  • Share on

பொத்தகாலன்விளை அங்கன்வாடிமைய குழந்தைகளுக்கு ஐஎன்டியூசி காங்கிரஸ் சார்பில் கல்வி உபகரணங்கள்  வழங்கப்பட்டது.

சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தக்காலன்விளை அங்கன்வாடிமைய குழந்தைகளுக்கு காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு கல்விஉபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. ஐஎன்டியுசி  மாநில காங்கிரஸ் பொதுச் செயலர் லூர்துமணி தலைமை வகித்தார். முதலூர் கிராம கமிட்டித் தலைவர் செல்வகுமார். தெற்குவட்டார  துணைத் தலைவர் செல்வ ஜெகன், சாஸ்தாவிநல்லூர்கிராம கமிட்டி பொறுப்பாளர் ஜோசப் செல்வராஜ், வட்டார பொதுச் செயலாளர்  அந்தோணி செல்வன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   அங்கன்வாடி மைய  பணியாளர் பாத்திமா  வரவேற்றார்.  குழந்தைகளுக்கு எழுதும்பலகை,  சிற்றுண்டி  பை, துண்டு,  பென்சில் டப்பா  மற்றும் இனிப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.  

இதில் பொத்தகாலன்விளை கிராம  கமிட்டித் தலைவர் சந்தன திரவியம் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள்  மலையாண்டி, அந்தோணி  உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர். அங்கன்வாடிமைய அமைப்பாளர் காமாட்சி  நன்றி கூறினார்.

  • Share on

சர்வீஸ் சாலை கோரி பயணியர் விடுதி முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!

கோவில்பட்டியில் கீழே கிடந்த தங்க செயினை காவல்நிலையத்தில் ஒப்படைத்த சகோதரர்கள்!

  • Share on