கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இந்திரா நகர் பகுதி மக்கள் சர்வீஸ் சாலை அமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி லட்சுமி மில் ரயில்வே மேம்பாலம் முதல் - இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாலம் வரை சர்வீஸ் சாலை அமைத்து தரக் கோரி கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இந்திரா நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இரண்டாவது ரயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளதால் - திலகர் நகர் , இந்திரா நகர், சீனிவாச நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் வெகு தூரம் சென்று கோவில்பட்டி நகருக்குள் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு லட்சுமி மில் ரயில்வே மேம்பாலம் முதல் - இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாலம் வரை சர்வீஸ் சாலை அமைத்து தர வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.