கோவில்பட்டி வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளை கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்திற்கு நேரில் சென்று வாழ்த்துக்கள் தெரிவித்து கௌரவித்தனர்.
வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சங்கர்கணேஷ் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகளை கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் தலைவர் க.தமிழரசன் தலைமையில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர் .
இந்நிகழ்வில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நாம் தமிழர் கட்சி ரவிக்குமார், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில்குமார், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், ஜெய்கிரிஷ் அறக்கட்டளை ஜெய்ஸ்ரீ கிறிஸ்டோபர், வழக்கறிஞர் முத்துக்குமார், ஐஎன்டியூசி ராஜசேகரன், துரைராஜ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துகுமார், ஜெகநாதன், மனிதநேய மக்கள்கட்சி செண்பகராஜ், இரட்டைமலை சீனிவாசனார் இயக்க செல்வகுமார், தர்மம்வெல்லும் அறக்கட்டளை பூலோகப்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.