• vilasalnews@gmail.com

குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து அறிவித்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!

  • Share on

குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து புத்தன்தருவை கிராம மக்கள் போராட்டம் அறிவித்திருந்தநிலையில், அதிகாரிகள் சமரசம் செய்யதைத்தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் நிறுத்திவைக்கப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்  ஒன்றியம், புத்தன்தருவை கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகிக்க வடிகால் வாரியம் சார்பில்  90 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு குடிநீர் வழங்கப்பட்டு வந்ததையடுத்து குடிநீர் முறையாக விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நிர்ணயிக்கப்பட்ட அளவை குறைத்து குடிநீர் விநியோகித்ததாக கூறப்படுகிறது. இதனால் கிராம மக்களுக்கு தேவையான குடிநீர் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் கிராம மக்கள்  தேவைக்கு  குடிநீர் கிடைக்காமல் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட குடிநீர் வழங்ககோரி புத்தன்தருவை கிராம மக்கள் ஊராட்சி மன்றம் அலுவலகம் முன்பு போராட்டம்  நடத்த உள்ளதாக அறிவித்தனர். இதனையறிந்த  தட்டார்மடம் காவல் ஆய்வாளர் அனிதா, குடிநீர் வடிகால் வாரிய உதவி இயக்குநர் ஜான் செல்வம் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். 

அப்போது குடிநீர் குழாய் பழுது காரணமாக நிர்ணயிக்கப்பட்ட குடிநீர்  விநியோகிக்கப்படவில்லை.  இன்னும் 1மாதத்தில் பழுது பார்த்தபின் முறையாக குடிநீர் வழங்கிடப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் கிராம மக்கள்  ஏற்க மறுத்தனர். இதனையடுத்து அதிகாரிகள்  இன்னும் ஒரு வாரத்தில்  கூடுதலாக குடிநீர் வழங்கிட நடவடிக்கை  எடுப்பதாகவும்,  குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டவுடன் மக்கள் எதிர்பார்க்கும் 90 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். அதனை ஏற்ற கிராம மக்கள் போராட்டத்தை தற்காலிக நிறுத்தி வைப்பதாக  தெரிவித்தனர்.

  • Share on

ராமர் பாதம் பட்ட மண்... பிஸ்கட்டால் உருவாக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை... களை கட்டிய குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனித்திருவிழா!

ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியம் அருகே அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக கூரை காற்றில் விழுந்ததால் பரபரப்பு!

  • Share on