• vilasalnews@gmail.com

தரிசு நிலங்களில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி

  • Share on

ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட வட்டாரத்தில் பெங்களூரு மண் வகையீடு மற்றும் நில பயன்பாடு மையத்தின் மூலம் தரிசு நிலங்களில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்றது.


தமிழ்நாடு அரசு,இந்தியா வேளாண்மை ஆராய்ச்சி கழகம் மற்றும் தமிழ்நாடு திட்ட குழு இணைந்து தரிசு நிலம் கண்டறிதல் மற்றும் மண்  பரிசோதனை செய்தல்  மூலம் பொருத்தமான பயிர்கள் மாற்று பயிர்கள் விளைவிக்க புதிய திட்டத்தினை செயல்படுத்த வழிவகுத்துள்ளது.


இத்திட்டம் மத்திய அரசின் மண் வகையீடு மற்றும் நில பயன்பாடு, பெங்களூரு தென்னிந்திய கிளை  மையம் உதவியுடன் முதன்மை விஞ்ஞானி முனைவர் சீனிவாசன் தமிழ்நாடு முழுவதும் மண் மாதிரி சேகரிப்பு பணி நடைபெறுகிறது.

காலநிலை வேறுபாட்டின் அடிப்படையில் கடந்த 20 வருட செயற்கைகோலின் புகைப்படம் மூலம் தமிழககத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தரிசுநிலம் கண்டறியப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக  தூத்துக்குடி மாவட்டத்தில் தரிசு நிலங்களில்  மண்  மாதிரிகள் சேகரிப்பு பணி நடைபெறுகிறது.


தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இயக்குனர் பொறுப்பு சாந்தி ராணி , வாகைக்குளம் பண்ணை அறிவியல் மையம் தலைவர் பழனிச்சாமி மற்றும்  ஓட்டப்பிடாரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பொறுப்பு சிவகாமி ஆகியோர் ஒத்துழைப்புடன்  தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம் மற்றும் விளாத்திகுளம் பகுதிகளில் அதிக தரிசு நிலம் கண்டறியப்பட்டு அந்த நிலங்களில் முனைவர் சீனிவாசன் குழுவினர் மண் மாதிரிகள் சேகரித்து வருகின்றனர். மேலும்  தரிசு நிலத்தில் 5 அடி ஆழ மண் குழிகள் தோண்டப்பட்டு மண் மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. மேலும் மண் அரிமானம் மற்றும் மண் வகையும்  கண்டறியப்படுகிறது. தொடர்ந்து சேகரிக்க பட்ட  மண் பெங்களூரு  ஆய்வகத்தில் மண் பரிசோதனை செய்யப்பட்டு  பகுப்பாய்வு முடிவின் அடிப்படையில் , தரிசு நில மேலாண்மை தொகுப்பேடு தயாரிக்கப்பட்டு ,அதன் மூலம் மண் தரம்,ஆழம், தாதுகள் கண்டறிந்து  மண் வகைகளுக்கு ஏற்ற பயிர்வகைகள் , தோட்டபயிர் மற்றும் பசுமை காடுகள் வளர்க்க பரிந்துரைக்கப்பட்டு  மண் மேலாண்மை நீர் மேலாண்மை மற்றும் உர மேலாண்மை அனைத்து தரிசு நிலத்திற்கும் வழங்கப்படும்.

  • Share on

முத்து நகர் மக்களின் பல நாள் கனவு.. தூத்துக்குடிக்கு வாரம் இரு சிறப்பு ரயில்!

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் கோவிலில் 424வது திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • Share on