• vilasalnews@gmail.com

இளம்புவனம் கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் நகை பறிப்பு

  • Share on

எட்டயபுரம் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் 4 பெண்களிடம் 16 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது :

எட்டயபுரம் அருகே உள்ள இளம் புவனத்தில் நேற்று பூமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. காலையில் அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம் ஆராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து கோபுர கலசத்திற்கு அபிஷேகம் நடந்தது. அப்போது பக்தர்கள் பரவசத்துடன் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நெருக்கடியான சூழ்நிலையை பயன்படுத்தி 4 பெண்களிடம் 16 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். பக்தி பரவசத்தில் தங்க செயின் பறிபோனது தெரியவில்லை.

பூஜை முடிந்து பார்த்தபோது, கழுத்தில் கிடந்த நகை மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்புவனம், செண்பகா நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி சண்முகம்மாளிடம் (50) 5 பவுன் நகையும், சின்னமுத்து மனைவி ஆவுடையம்மாளிடம் (63)  3 பவுனும், மந்திரம் மனைவி பேச்சியம்மாளிடம் (60)  5 பவனும், பால்சாமி மகள் முருகேஸ்வரியிடம் (50) 3  பவுனும் பறிபோனதாக எட்டயபுரம் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, எட்டயபுரம் காவல்துறையினர் நகையை அபகரித்துச் சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

ஆலந்தலையில் தூண்டில் வளைவு : எம்எல்ஏ சண்முகநாதனுக்கு மீனவ மக்கள் நன்றி

  • Share on