• vilasalnews@gmail.com

கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்புப் பூஜை!

  • Share on

கோவில்பட்டி கதிரேசன் கோயில் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கதிரேசன் ரோடில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத பிறப்பு சிறப்பு பூஜை விமர்சையாக நடைப்பெற்றது. இதனையொட்டி  ஸ்ரீ வெற்றி விநாயகர் முத்துமாரியம்மன் சந்தன கருப்பசாமிக்கு 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது.  இவ்விழாவில் கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.  பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணிய சுவாமி செய்தார்.  ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

  • Share on

புதியம்புத்தூரில் போதையில்லா சமூகத்தை உருவாக்க மினி மராத்தான் போட்டி - மாணவ மாணவிகள் பங்கேற்பு!

முத்து நகர் மக்களின் பல நாள் கனவு.. தூத்துக்குடிக்கு வாரம் இரு சிறப்பு ரயில்!

  • Share on