• vilasalnews@gmail.com

புதியம்புத்தூரில் போதையில்லா சமூகத்தை உருவாக்க மினி மராத்தான் போட்டி - மாணவ மாணவிகள் பங்கேற்பு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் பிரசன்னா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் போதையில்லா சமூகத்தை உருவாக்க மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.

போட்டியானது 14, 17, 19 வயது பிரிவுகளில் மாணவர்கள் மாணவியர்கள் இரு பிரிவாக நடைபெற்ற போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளை தூத்துக்குடி  ரூரல் டிஎஸ்பி ராஜ சுந்தர், பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த  பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


இதில் 14 வயதிற்கு  உட்பட்ட ஆண்கள் பிரிவில் காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த வெற்றிவேல் முதலிடத்தையும்,  பிரகாஷ் இரண்டாவது இடத்தையும், பூபதி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ரூபிகா முதலிடத்தையும், கனிஷ்கா இரண்டாவது இடத்தையும், நாகலட்சுமி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

17 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில்  காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாரிச்செல்வம் முதலிடத்தையும், உத்தண்ட ராமன் இரண்டாவது இடத்தையும், முகில் பாரதி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த மகாலட்சுமி முதலிடத்தையும், அபிநயா இடத்தையும் , கற்பக ஜோதி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.


19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில்  காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த கருத்தப்பாண்டி முதலிடத்தையும், ரவி மணிகண்டன்  இரண்டாவது இடத்தையும், புதியம்புத்தூர் பிரசன்னா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி  மகாராஜன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி கனக லட்சுமி முதலிடத்தையும், மஞ்சு அர்ச்சனா இரண்டாவது இடத்தையும், லட்சுமி தேவி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர் .

தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் டிஎஸ்பி ராஜசுந்தர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்  மற்றும்  சான்றிதழ்களையும் வழங்கி  டிஎஸ்பி ராஜ சுந்தர் பேசுகையில்:-


உள்ளத்தையும் உடலையும் உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மராத்தான் போட்டி நடத்தப்படுகிறது. மேலும் போதை பொருட்களை பயன்படுத்துவதால் கேன்சர் நோய் வருகிறது. தொடர்ந்து சிறுமூளை பாதிக்கப்படுகிறது. தொடர்ந்து உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழக்க செய்கிறது. மேலும் தேவையில்லாத பிரச்சினைகளும் உருவாகிறது. எனவே இளம் பருவத்திலேயே போதை பொருள்களை பயன்படுத்தக் கூடாது. மேலும் போதைப்பொருட்களை யாரும் வியாபாரம் செய்தால் 100 என்ற எண்ணிற்கு கால் செய்தால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும். 

போட்டிகளில் வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு. தமிழ்நாடு அரசாங்கம்  அரசு பணிகளில் விளையாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எனவே மாணவ மாணவிகளுக்கு படிப்பும் முக்கியம், விளையாட்டும் முக்கியம் என பேசினார்.

நிகழ்ச்சியில் பிரசன்னா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் பிரதீப், சந்தீப், ஓட்டப்பிடாரம் வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

பசுவந்தனையில் பனியன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை!

கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்புப் பூஜை!

  • Share on