வியாபாரத்தில் நஷ்டம் அடைந்ததால் பனியன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே கீழப்பூவாணி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் சக்கையா (29). இவர் இருசக்கர வாகனத்தில் ஊர் ஊராக சென்று பனியன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படவே வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் பசுவந்தனை அருகில் உள்ள செவல்பட்டி கிராமத்திற்கு தாய்மாமன் வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர், பசுந்தனைக்கு வந்த சக்கையா அங்குள்ள குளத்துகரையில் விஷம் அருந்திய நிலையில் கிடந்துள்ளார். இதை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து பசுவந்தனை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்