ஓட்டப்பிடாரம் அருகே நடந்த இருசக்கர வாகன விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விளாத்திகுளம் பாரதியார் தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் மகாராஜா ( 20) மற்றும் ஓட்டப்பிடாரம் மெயின் பஜார் பகுதியைச் 17 வயது இளஞ்சிறார் ஆகிய இருவரும் கடந்த ஜூலை 13ஆம் தேதியன்று ஓட்டப்பிடாரத்தில் இருந்து குறுக்கு சாலை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, மேலலட்சுமிபுரம் விலக்கு அருகே சென்று சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் திடீரென நிலைத்தடுமாறி சாலையோரத்தில் இருந்த நெடுஞ்சாலைத்துறை எச்சரிக்கை பலகை மீது மோதி விபத்துக்குள்ளானதில் மகாராஜாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு மகாராஜா பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .