சாத்தான்குளம் அருகே தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் கிரைண்டர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் கிரைண்டர், மிக்ஸி, குக்கர், ஹாட் பாக்ஸ், மின்விசிறி உள்ளிட்ட உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டது. இதில் அதிமுக பிரமுகர் ஸ்டான்லி தலைமை வகித்து பரிசு பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் பாராட்டினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஆசிரியர் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.