சாத்தான்குளம் அருகே வழிமறித்து செல்போன், பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே தேரிப்பனை டி.கே.சி. நகரைச் சேர்ந்தவர் செல்லச்சாமி மகன் முருகன் (51). விவசாயியான இவர் பைக்கில் பண்ணம்பாறை வள்ளியம்மாள் புரத்தில் உள்ள உறவினரை பார்த்துவிட்டு திரும்பி செல்லும் போது, பைக்கில் வந்த 4பேர் அவரை வழிமறித்து பண்ண பாறைக்கு வழி கேட்டு உள்ளனர். அப்போது அவர் எதிர்பாராத நேரத்தில் அவரது செல்போன் மற்றும் ரூ.500 பணத்தை பறித்து சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார். அதன் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன் வழக்கு பதிவு செய்தார். உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் இன்ஸ்பெக்டர் ஜீன் குமார் ஆகியோர் விசாரணை நடத்தி பணம், செல்போன் பறித்த ஸ்ரீவைகுண்டம் சுபாஷ் நகரை சேர்ந்த மாடசாமி மகன் மகேஷ் சூர்யா (20) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.