விளாத்திகுளம் அருகே கட்டப்பட்ட புதிய கலையரங்கத்தை மார்கண்டேயன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள மந்திகுளம் - மீனாட்சிபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்க கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், சீனிவாசன், திமுக ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, அன்பு ராஜன் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.