முடிவைத்தானேந்தல் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே முடிவைத்தானேந்தல் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து முடிவைத்தானேந்தல், கட்டாலங்குளம், வர்த்தகரெட்டிபட்டி, அல்லிகுளம் , திம்மராஜபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
இம்முகாமில், வட்டாட்சியர் பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.