தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்ப உதவி இயக்குனர் பேச்சியம்மாள் விடுத்த செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. இதில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2,பட்டப் படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம்.
தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களின் சுய விவரங்கள் மற்றும் கல்வி சான்றிதழ் உடன் வர வேண்டும். தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப் பட்டாலும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது.
தனியார் நிறுவனத்தினர் தங்களுக்குத் தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய இம்முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 63 80089 119 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
எனவும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தின் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.