• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் ரெய்டு : கையும் களவுமாக சிக்கிய செயல் அலுவலர்!

  • Share on

விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் ரெய்டு மேற்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன் லஞ்சம் வாங்கியதாக வந்த ரகசிய தகவல் அடிப்படையில் இன்று தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையிலான போலீசார் விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் நடத்திய திடீர் சோதனையில், பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரனின் அலுவலக அறையிலருந்தும்,  அவரது டிரைவர் மாரிச்செல்வத்திடம் இருந்தும் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 500 பணத்தினை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைப்பற்றி விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் செயல் அலுவலர் மகேஸ்வரன் பிளாட் அப்ரூவலுக்காக இந்த ரூ.1,34,500 லஞ்சம் வாங்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில்‌ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அலுவலகத்தில் பணிபுரியும் மற்ற பணியாளர்கள் அனைவரிடமும் சோதனை மேற்கொண்டு இதில் அவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து  விசாரணை செய்து வருகின்றனர்.

  • Share on

கோவில்பட்டி அருகே சுடுகாட்டில் வேன் உரிமையாளர் வெட்டி படுகொலை - போலீசார் விசாரணை!

முடிவைத்தானேந்தல் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்!

  • Share on