• vilasalnews@gmail.com

வெடிபொருள் சேமிப்புக் குடோனில் அதிகாரிகள் ஆய்வு

  • Share on

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தனியாா் வெடிபொருள் சேமிப்புக் குடோனில்  காவல் மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.


தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே பத்மநாபமங்கலம் கிராமத்தில் உள்ள வல்லநாடு மான்கள் சரணாலயம் அருகே செயல்படும் தனியாா் வெடிபொருள் சேமிப்புக் குடோனில்  காவல் மற்றும் வருவாய்த் துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.


தூத்துக்குடி மாவட்டத்துட்பட்ட பகுதிகளில் செயல்படும் வெடிபொருள்கள் தயாரிக்கும் இடங்கள், சேமிப்புக் கிடங்குகளில் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ள ஆட்சியா் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன், மாவட்ட தொழில் துறை பாதுகாப்பு - சுகாதார துணை இயக்குநா் சிவக்குமாா், மாவட்ட கூடுதல் தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறை அதிகாரி நட்டாா் ஆனந்தி, ஸ்ரீவைகுண்டம் வருவாய்த் துறை ஆய்வாளா் பிரீத்தா, கிராம நிா்வாக அலுவலா் பத்மா உள்ளிட்டோா் இந்தக் கிடங்கில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தனர்.


இப்பகுதியில் அவ்வப்போது வெடிவிபத்துகள் நேரிடுவதால், தனியாா் வெடிபொருள் சேமிப்புக் கிடங்கு செயல்பட அனுமதிக்க கூடாது என சமூக ஆா்வலா்கள் பலா் வலியுறுத்திவரும் நிலையில், இந்த ஆய்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

  • Share on

தூத்துக்குடியில் 18ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

கோவில்பட்டி அருகே சுடுகாட்டில் வேன் உரிமையாளர் வெட்டி படுகொலை - போலீசார் விசாரணை!

  • Share on