தூத்துக்குடியில் வருகிற 18ஆம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக நகா்ப்புற செயற்பொறியாளா் இரா. கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி அருகே அரசடி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பணிகள் நடைபெறவுள்ளதால் மேல அரசடி, கீழ அரசடி, சமத்துவபுரம், தருவைக்குளம், பட்டினமருதூா், தருவைகுளம், பட்டினமருதூா் உப்பளம் சாா்ந்த பகுதிகள், சில்லாநத்தம், வேலாயுதபுரம், சாமிநத்தம், கிழக்குக் கடற்கரைச் சாலை, வாலசமுத்திரம், புதூா் பாண்டியாபுரம், எட்டயபுரம் சாலை வடபுறம் உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 18ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.