கடலோர பகுதியில் சூறாவளி காற்று காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மீன்வளத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வானிலை எச்சரிக்கை செய்தியின் படி 16.7.2024 செவ்வாய்க்கிழமை மன்னார் வளைகுடா மற்றும் அதை சுற்றி உள்ள தென் தமிழக கடலோர பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகம் முதல் 65 கிலோ மீட்டர் வரை வீச கூடும் என்பதால், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மட்டும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, மீன்பிடி துறைமுகம் நுழைவாயிலில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைப்படைகளும் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.