ஓட்டப்பிடாரத்தில் புதிய பாரத எழுத்தறிவு இயக்கம் தொடக்க விழா நடைபெற்றது.
ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு இயக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் இன்று நடைபெற்றது. இதில் ஓட்டப்பிடாரம் மெக்கவாய் துவக்கப்பள்ளி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா கலந்து கொண்டு புதிய பாரத எழுத்தறிவு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் பவணந்திஸ்வரன், தலைமை ஆசிரியர் கமலகண்ணன், ஆசிரியர் பயிற்றுநர்கள் மாரிமுத்து, கண்ணன், சஞ்சீவி, தன்னார்வலர் முத்துமாரி ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட கற்போருக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.