• vilasalnews@gmail.com

மக்களவை தேர்தல் வெற்றி : குறுக்குச்சாலையில் பொதுமக்களுக்கு கனிமொழி எம்பி நன்றி தெரிவிப்பு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலை சந்திப்பு பகுதியில் பாராளுமன்ற தேர்தலில் தன்னைவெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு கனிமொழி எம்பி நன்றி தெரிவித்தார். 


 அப்போது அவர் பேசுகையில் :-


உங்களுடைய அன்பான வரவேற்புக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய மக்களவை உறுப்பினராக உங்களுடைய குரலாக நாடாளுமன்றத்திலே ஒலிக்க கூடிய வாய்ப்பை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த உங்கள் அத்தனை பேருக்கும்  சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதே போல் இந்த வெற்றிக்காக உழைத்திருக்கக்கூடிய கழக தொண்டர்களுக்கும் கூட்டணி கட்சி நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய மாவட்ட  செயலாளர் அமைச்சர் கீதா ஜீவனுக்கும் சட்ட மன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனுக்கும் ஒன்றிய செயலாளர் காசி விசுவநாதனுக்கும் கழகத்தில் பொறுப்பில் இருக்கக்கூடிய உடன்பிறப்புகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


தொடர்ந்து உங்களோடு நின்று உங்களில்  ஒருத்தியாக உங்களுக்காக பணி புரிவேன். உங்களுடைய கோரிக்கைகள் உங்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதில் உங்களுடைய சட்டமன்ற உறுப்பினரோடும் அமைச்சரோடும் இணைந்து பாடுபடுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என பேசினார்.


இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் , ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விசுவநாதன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், திமுக பேச்சாளர் சரத் பாலா மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்!

ஓட்டப்பிடாரத்தில் புதிய பாரத எழுத்தறிவு இயக்கம் தொடக்கம்!

  • Share on