கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகத்தினர் தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும், இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பம் செய்துள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகத்தினர் தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகம் முன்பு மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் அன்புராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையில் வலியுறுத்தி தபால் அட்டைகளை தபால் பெட்டியில் போட்டனர்.
இதில், மாநில பொதுச் செயலாளர் செல்லப்பா, தென்மண்டல மகளிர் அணி செயலாளர் சுப்புலட்சுமி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பேச்சிமுத்து, தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி செயலாளர் பால் துரை, மாநில கொள்கை பரப்பு செயலாளர் முனியசாமி, மாநில துணை பொதுச்செயலாளர் பொன்னுச்சாமி, மாநில இளைஞரணி செயலாளர்கள் பிரகாஷ் தேவேந்திரர், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் அன்ன லட்சுமி, ஒன்றிய மகளிர் அணி முத்துலட்சுமி, ஒன்றிய மகளிர் அணி துணை செயலாளர் மணி, கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பொன்மாடசாமி, நகர இளைஞரணி கோகுல், ராக்கையா, மகாலிங்கம் கனகராசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.