கோவில்பட்டியில் நாடார் நடுநிலைப்பள்ளி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 122 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கல்வி வளர்ச்சியை வலியுறுத்தி காமராஜர் முகமூடி அணிந்தவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர்.
அதேபோல், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ தலைமையில் அதிமுகவினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் நகர் மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதேபோல், காங்கிரஸ், மதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், பாமக, தேமுதிக, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.