சொக்கலிங்கபுரத்தில் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மாற்று திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள், பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருஉருப்படத்திற்கு பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், மாற்று திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள், பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பாஜக மாவட்ட சுற்றுப்புற சூழல் மாவட்டச் செயலாளர் சித்திரபாண்டியன் தலைமை நடைபெற்ற இவ்விழாவில், சுற்றுப்புற சூழல் மாவட்டத் தலைவர் ஸ்ரீராம் சுரேஷ், சாத்தான்குளம் மண்டல தலைவர் சரவணன், மாவட்டத் துணைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர் மகேஸ்வரன், சாத்தான்குளம் மண்டல் பொறுப்பாளர்கள், இந்து முன்னணி மாநில அமைப்பாளர் சக்திவேல், சொக்கலிங்கபுரம் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.