முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை விசுவாசபுரம் மற்றும் அனுக்கிரகபுரம் தொடக்கப் பள்ளிகளில் சாத்தான்குளம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன் தொடங்கி வைத்தார்.
பின்னர், கொம்மடிக்கோட்டை மற்றும் தட்டார்மடம் பஜாரில் நடைபெற்ற காமராஜரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு, அவரது திருஉருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த குமார், திமுக நிர்வாகிகள் ரனீஷ், தேவதாஸ், ரோஸ்லின் கலாவதி, சேவியர் விஜேஷ், முரளி ஜெய கிருஷ்ணன், பாலவிவேக், அந்தோணி கனி உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்