தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில், விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி உரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் ரெஜினி, பள்ளி தலைமை ஆசிரியர் சேகர், ஓட்டப்பிடாரம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய குழு தலைவர் ரமேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் வேல்கனி, பாலசுப்பிரமணியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கேப்டன் கேசவன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சென்னை செல்வகுமார், சென்னை சோலையப்பன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தங்கச்சாமி, புளியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜகோபால், சூரங்குடி கூட்டுறவு சங்க செயலாளர் ராமச்சந்திரன், வேடநத்தம் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆனந்த், கிளைச் செயலாளர்கள் மாரியப்பன், முத்துராஜ், முருகேசன், கனகராஜ், ரூஸ்வெல்ட், முன்னாள் ஊராட்சி செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மாரிச்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.