குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லூர் குரங்கன்தட்டு பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி மகன் மூர்த்தி (28) என்பவர் கடந்த 12.07.2024 அன்று மதியம் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு பின்னர் வந்து பார்த்தபோது அவரது வீட்டில் இருந்த 2 செல்போன்களை மர்மநபர் திருடி சென்றுள்ளார்.
இதுகுறித்து மூர்த்தி அளித்த புகாரின் பேரில் குரும்பூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில்லை அதே பகுதியில் சேர்ந்த ராஜா மகன் ராகவன் (24) என்பவர் மேற்படி மூர்த்தியின் வீட்டிற்குள் புகுந்து செல்போன்களை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து குரும்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பெபின் செல்வபிரிட்டோ வழக்கு பதிவு செய்து ராகவனை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூ. 30,000 மதிப்புள்ள 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து குரும்பூர் காவல் நிலையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.