• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மாநகர காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா - நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

  • Share on

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாப்படுகிறது.

இதனையடுத்து, தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் சண்முகபுரம் மெயின் ரோட்டில் நடைபெற்ற காமராஜரின் பிறந்தநாள் விழாவில், மாநகர காங்கிரஸ் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார் முன்னாள் எம்எல்ஏக்கள் டேனியல் ராஜ், சுடலையாண்டி ஆகியோரின் முன்னிலையில் வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணை தலைவர் ஏபிசிவி சண்முகம் கலந்து கொண்டு காமராஜரின் 122 வது பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர் சந்திரபோஸ், கண்ணன், வெள்ளைச்சாமி, அண்ணாமலை சாமி, ராம் குமார், சிவக்குமார், சதீஷ் குமார், அருணகிரி, சத்தியன், மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சண்முகபுரம் பகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

  • Share on

விளாத்திகுளத்தில் பேக்கரி கடை ஊழியர் உயிரிழப்பு : போலீசார் விசாரணை!

வீட்டிற்குள் புகுந்து செல்போன்களை திருடியவர் கைது - ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்கள் மீட்பு!

  • Share on