• vilasalnews@gmail.com

விளாத்திகுளத்தில் பேக்கரி கடை ஊழியர் உயிரிழப்பு : போலீசார் விசாரணை!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சுந்தரபச்சையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பால்பாண்டி மக மணிமாறன் (29). விளாத்திகுளம் சுப்ரமணியபுரத்தில் அமைந்துள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். 

இந்நிலையில் வழக்கம் போல பேக்கரியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மணிமாறன் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் வயிறு வலிப்பதாக கூறிவிட்டு கடையின் ஊழியர்கள் தங்கும் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ளார். பின், சக ஊழியர்கள் பேக்கரிக்கு வேலைக்குச் சென்ற நிலையில் மணிமாறன் மட்டும் அறையில் தூங்கிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில்  அறையில் தூங்கிக்கொண்டிருந்த மணிமாறன் கண்ணிலிருந்து இரத்தம் வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அவரை எழுப்ப முயற்சித்தபோது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து உடனடியாக மணிமாறன் குடும்பத்தினர் மற்றும் விளாத்திகுளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் வெங்கடேஷ் பெருமாள் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த  மணிமாறனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

முதல்வரின் காலை உணவு விரிவாக்க திட்டம் : புதியம்புத்தூர் பள்ளியில் யூனியன் சேர்மன் ரமேஷ் தொடங்கி வைத்தார்!

தூத்துக்குடியில் மாநகர காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா - நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

  • Share on