• vilasalnews@gmail.com

முதல்வரின் காலை உணவு விரிவாக்க திட்டம் : புதியம்புத்தூர் பள்ளியில் யூனியன் சேர்மன் ரமேஷ் தொடங்கி வைத்தார்!

  • Share on

புதியம்புத்தூர் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் முதல்வரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை யூனியன் சேர்மன் ரமேஷ் தொடங்கி வைத்தார்.

தமிழக முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் 

இதைத்தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் முதல்வரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர்  ரமேஷ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவ மாணவிகளோடு அமர்ந்து காலை உணவு அருந்தினார்.


இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா, கிரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ், வட்டார கல்வி அலுவலர்கள் பவண்தீஸ்வரன், மகாலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியை கிரீட்டா, ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், நகரச் செயலாளர் லிங்கராஜ், வர்த்தக அணி முத்துக்குமார், சிறுபான்மை அணி ஞானதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் நகைகளை திருடி எஸ்கேப் ஆன வடமாநில இளைஞர் : மும்பையில் தட்டி தூக்கிய தூத்துக்குடி போலீஸ்!

விளாத்திகுளத்தில் பேக்கரி கடை ஊழியர் உயிரிழப்பு : போலீசார் விசாரணை!

  • Share on