• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் நகைகளை திருடி எஸ்கேப் ஆன வடமாநில இளைஞர் : மும்பையில் தட்டி தூக்கிய தூத்துக்குடி போலீஸ்!

  • Share on

தூத்துக்குடியில் உள்ள நகை பாலிஷ் போடும் கடையில் 200 கிராம் நகைகளைத் திருடியதாக கடை ஊழியரான மேற்கு வங்க இளைஞரை போலீசார் மும்பையில் கைது செய்து தூத்துக்குடி சிறையில் அடைத்தனர்.


தூத்துக்குடியில் உள்ள டி.ஆர். நாயுடு தெருவைச் சேர்ந்த பிரபாகரன் மகன் பிரவீன் (43). இவர், அப்பகுதியில் நகை பாலிஷ் போடும் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில், அந்தக் கடையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பஷீர் உதீன் என்ற நவசுதீன் (26) என்ற வடமாநில இளைஞர் பணியாற்றி வந்தார். இதனையடுத்து, அங்கு பாலிஷ் போடுவதற்காக 200 கிராம் தங்க நகைகளை ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததாம். இதற்கிடையே நவசுதீன் கடந்த ஜூன் 18 ஆம் தேதி ஊருக்குச் சென்றுவிட்டார். 


பின், அந்த நகைப் பெட்டியை பிரவீன் பார்த்தபோது, அதிலிருந்த நகைகளைக் காணவில்லையாம். இதுகுறித்த புகாரின் பேரில் மத்திய பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். பின், மும்பையில் உள்ள நகைக்கடையில் நவசுதீன் வேலை செய்து வருவதாக, விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மத்திய பாகம் போலீசார் மும்பை சென்று அவரைக் கைது செய்து, தூத்துக்குடி அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 198 கிராம் நகைகளைப் பறிமுதல் செய்தனர்.

  • Share on

விளாத்திகுளம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

முதல்வரின் காலை உணவு விரிவாக்க திட்டம் : புதியம்புத்தூர் பள்ளியில் யூனியன் சேர்மன் ரமேஷ் தொடங்கி வைத்தார்!

  • Share on