• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் தமிழ்நாடு டேக்வாண்டோ அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான 11 வது டேக்வாண்டோ போட்டி!

  • Share on

தூத்துக்குடியில் தமிழ்நாடு டேக்வாண்டோ அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான 11 வது டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது.

தமிழ்நாடு டேக்வாண்டோ அசோசியேஷன் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் மாவட்ட அளவிலான 11 வது டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட டேக்வாண்டோ அசோசியேஷன் செயலாளர்  ஜெயராம், தலைவர் குமாரவேல், பொருளாளர் பார்வதிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். டேக்வாண்டோ தேசிய நடுவர் கு.இ.ராஜா, ஜோசப் ஜெஃப்ரி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்


போட்டியில் மாவட்டம்  முழுவதும் இருந்து பல்வேறு அணிகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது.

போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு டேக்வாண்டோ அசோசியேஷன்,  கு.இ.ராஜா துணிவு ஸ்போர்ட்ஸ் அகடாமி ஆகியோர் செய்திருந்தனர்.

முடிவில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.

  • Share on

குறுக்குச்சாலையில் மின்கம்பியை திருடிச்சென்ற நபரை கையும் களவுமாக அமுக்கிய போலீஸ்!

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டி : மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்!

  • Share on