குறுக்குச்சாலையில் மின்கம்பியை திருடிச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய தலைமைக் காவலர் கிருஷ்ணன் மற்றும் முதல்நிலை காவலர் குமார் ஆகியோர் இன்று (14.7.24 ) அதிகாலை சுமார் 1 மணி அளவில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குசாலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் மின்கடத்தி வயரை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் தெற்கு சிந்தலக்கட்டை கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் மகேஷ் (35) என்பதும் ஓட்டப்பிடாரம் அருகே சந்திரகிரி கிராமப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலையில் இருந்து சப் ஸ்டேஷனுக்கு மின் இணைப்பு செய்யும் பணிக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 12 மீட்டர் மின் கம்பியை திருடி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.24 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதை அடுத்து போலீசார் மகேஷை கைது செய்து அவரிடமிருந்து ரூ.24 ஆயிரம் மதிப்புள்ள மின் கம்பி மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.