ஓட்டப்பிடாரம் அருகே கச்சேரிதளவாய்புரத்தில் கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தை ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ரமேஷ் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே கச்சேரி தளவாய்புரம் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ சந்தன மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ கருப்பசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் சின்ன மாட்டு வண்டி போட்டியை ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ரமேஷ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி, விவசாய அணி அழகுராஜ், ஊர் நாட்டாமை சண்முகசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.