புதியம்புத்தூரில் ஆனித் திருவிழாவை மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி அருள்மிகு ஸ்ரீ லிங்க சுடலைமாடசாமி திருக்கோவில் ஆனித் திருவிழா வெகு விமர்சையாக ஜூலை 8 ஆம் தேதி அன்று தொடங்கியது. இந்நிலையில் இன்று 7 வது நாள் நிகழ்ச்சியாக மாபெரும் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. போட்டிகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டிகளை தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி ராஜா சுந்தர், புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மாட்டு வண்டி போட்டியானது, பெரிய மாடு, சின்ன மாடு, தேன் சிட்டு என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இதில், பெரிய மாட்டு வண்டி பிரிவில் மதுரை அவனியாபுரம் அய்யங்கார் பேக்கரி மாட்டு வண்டி முதல் இடத்தையும், வேலங்குளம் கண்ணன் மாட்டு வண்டி இரண்டாவது இடத்தையும் சொக்கலிங்கபுரம் கவி ஸ்ரீ மாட்டு வண்டி மூன்றாவது இடத்தையும், புதுக்கோட்டை மாவட்டம் சரவணா டிரேடர்ஸ் வண்டி நான்காவது இடத்தையும் பிடித்தன.
தொடர்ந்து நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பிரிவில் அரசனேரிப்பட்டி கே.எல்.கே பாட்ஷா மாட்டு வண்டி முதலிடத்தையும், கே.சண்முகபுரம் அய்யங்கார் பேக்கரி அவனியாபுரம் வண்டி இரண்டாவது இடத்தையும், நைனார்புரம் சரஸ்வதி மாட்டுவண்டி மூன்றாவது இடத்தையும் குலசேகரநல்லூர் வீர பெருமாள் அய்யனார் மாட்டுவண்டி நான்காவது இடத்தையும் பிடித்தன.
தேன்சிட்டு பிரிவில் சிதம்பரபுரம் ஆதி மாட்டு வண்டி முதலிடத்தையும், முப்பலிபட்டி ஆர்.எஸ்.ஆர் மாட்டுவண்டி இரண்டாவது இடத்தையும், மேட்டூர் அழகர் பெருமாள் மாட்டு வண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. குதிரை வண்டி போட்டியில் தச்சநல்லூர் நவீன் போஸ் வண்டி முதலிடத்தையும், திருச்செந்தூர் வினோத் வண்டி இரண்டாவது இடத்தையும், தச்சநல்லூர் நவீன் போஸ் வண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. தொடர்ந்து வெற்றி பெற்ற காளைகள் மற்றும் குதிகளன் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.