நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யிடம் திமுக தகவல் தொழில்நுட்ப அணி அணியினர் புகார் அளித்தனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் புகார் மனு அளித்தனர். இந்நிகழ்வில், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் குபேர் இளம்பருதி, மாநகர துணை அமைப்பாளர் ரூபராஜா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், நாகராஜன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, அண்ணாநகர் பகுதி ஒருங்கிணைப்பாளர் அஸ்வின் துரை, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.