• vilasalnews@gmail.com

தேவேந்திர குல மள்ளர் தொழில் வர்த்தக சபை முப்பெரும் விழா

  • Share on

தூத்துக்குடியில்  தேவேந்திர குல மள்ளர் தொழில் வர்த்தக சபை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு வருகை தர இருக்கும் தேசியத்தலைவர் பன்னாட்டு நீதிமான் காமராஜருக்கு ஐபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு அளிக்க தூத்துக்குடி மாவட்ட தேவேந்திர குல மள்ளர் தொழில் வர்த்தக சபை முடிவு.

வருகிற 6.2.2001 சனிக்கிழமை, மதியம் 2 மணி அளவில், தூத்துக்குடி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள இராமலட்சுமி மஹாலில் வைத்து, தேவேந்திர குல மள்ளர் தொழில் வர்த்தக சபை சார்பில், தென்மண்டல அளவிலான, தொழில் முனைவோர் கருத்தரங்கம், தேவேந்திரகுல வேளாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பாராட்டு விழா, செயல்வீரர்கள் கூட்டம்  என  முப்பெரும் விழா நடைபெறுகிறது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட தேவேந்திர குல மள்ளர் தொழில் வர்த்தக சபையினர் தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது :

தேவேந்திர குல வேளாளர் மக்களை பொருளாதார ரீதியாக முன்னேற்ற படவேண்டும் என்ற லட்சியத்தோடு இந்த வர்த்தக சபை தொடங்கபட்டு செயல்பட்டு வருகிறது.  கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக விருதுநகரில் தேவேந்திர குல மள்ளர் தொழில் வர்த்தக சபையும் கனரா வங்கி யும் இணைந்து லோன் மேளா நடத்தி னோம். அதன் மூலம் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு லோன் வழங்கப்பட்டு தொழில் நடத்த வழிவகை செய்யப்பட்டது.

கிராமப்புறங்களில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் புதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் மூன்று மாதங்களில் சுமார் ஆயிரம் தொழில் முனைவோர்களை உருவாக்குவது உள்ளிட்ட நோக்கங்களோடு செயல்பட்டு வரும் தேவேந்திர குல மள்ளர் தொழில் வர்த்தக சபை சார்பில் தூத்துக்குடியில் முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது.

தேவேந்திர குல மள்ளர் தொழில் வர்த்தக சபை தேசிய தலைவரான பன்னாட்டு நீதிமான் காமராஜர் ஐபிஎஸ் தலைமையில், நடைபெறும் இவ்விழாவில், விழாவிற்கு வருகை தரும் அவருக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விழாவில், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன் வரவேற்புரை ஆற்றுகிறார். தென் மண்டல செயலாளர் வழக்கறிஞர் அரவிந்த ராஜா முன்னிலை வகிக்கிறார்.

மாநில பொதுச்செயலாளர் கண்ணுச்சாமி, மாநில துணைத்தலைவர் அலெக்சாண்டர், மாநகர தலைவர் - சென்னை சாமி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

தூத்துக்குடி மாநகர செயலாளர் செல்வன், துரைச்சாமி, கௌரவ ஆலோசகர் பரதன், தெற்கு மாவட்ட தலைவர் கோவில் பிச்சை, மாவட்ட பொருளாளர் பேச்சு பாண்டியன், தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கண்ணன், வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர்  பிரேம்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் அபினேஷ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். முனைவர் சம்பத்குமார் தொகுப்புரை  வழங்குகிறார்.  தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தினேஷ் நன்றியுரை ஆற்றுகிறார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது சுப்புலட்சுமி, புகழேந்தி மணியன், ஜெயமுருகன், சுரேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

திருச்செந்தூர் மாசித் திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் - இந்து முன்னணி கோரிக்கை

  • Share on