விளாத்திகுளம் பாரதியார் தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் மகாராஜா ( 20) மற்றும் ஓட்டப்பிடாரம் மெயின் பஜார் பகுதியைச் சேர்ந்த முத்துசரவணன் மகன் கோமதிநாயகம் (17) ஆகிய இருவரும் நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் ஓட்டப்பிடாரத்தில் இருந்து குறுக்கு சாலை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனம் மேலலட்சுமிபுரம் விலக்கு அருகே சென்று சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் மகாராஜாவிற்கு தலையில் பலத்த காயமும், கோமதிநாயகம் என்பவருக்கு வலது கையில் காயமும் ஏற்பட்டது .
தொடர்ந்து அவ்வழியாக வந்தவர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .